மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

கடற்படை வீரர்கள் மீதான விசாரணையை துரிதமாக நடத்த இத்தாலி வலியுறுத்தல்

இத்தாலியின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஸ்டஃபான் டி மிஸ்டுரா இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை திங்கள்கிழமை இரவு சந்தித்து வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும்படி

Updated On :11 ஜூன் 2013, 7:26 pm IST

இந்திய மீனவர்களை கொன்றது தொடர்பான தங்கள் நாட்டு கடற்படை வீரர்கள் மீதான விசாரணையை துரிதமாக நடத்தும்படி மத்திய அரசிடம் இத்தாலி வலியுறுத்தி உள்ளது.

கேரள மாநில கடல்பகுதியில் இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்றதாக இத்தாலியைச் சேர்ந்த 2 கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை தில்லியில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன்கூறியதாவது:

இத்தாலியின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஸ்டஃபான் டி மிஸ்டுரா இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை திங்கள்கிழமை இரவு சந்தித்து வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும்படி வலியுறுத்தினார்.இந்திய நீதித்துறை தனக்கேற்ற வேகத்தில்தான் விசாரணையை மேற்கொள்ளும். அதற்கென உள்ள தனித்தன்மையுடன் விசாரணை நடைபெறும் என சல்மான் குர்ஷித் கூறினார் என்றார் அக்பருதீன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.